Carbon Nanotubes based hydrogen storage and characterization

Karthigeyan Annamalaia*, Lathapriya Vellingiria, Ramamurthi Kandasamya, b, Iyakutti Kombiaha, b

aHydrogen Storage materials and Nanosensors Laboratory

bCrystal Growth and Thin Film Laboratory, Department of Physics and Nanotechnology, Faculty of Engineering and Technology, SRM Institute of Science & Technology, Kattankulathur -603203

Hydrogen, a green energy carrier with high energy density as compared to fossil fuels is one of the suitable alternative clean energies. For practical mobile applications, a compact, lightweight and inexpensive hydrogen storage material having fast adsorption and desorption kinetics in near ambient conditions is necessitated. Carbon nanostructure-based materials such as single-walled carbon nanotubes (SWCNTs), multi-walled carbon nanotubes (MWCNTs) and their hybrids are considered as potential candidates for hydrogen storage owing to large surface area, lightweight and stability.CNTs functionalized with SnO2 were prepared by a simple chemical route. Structural, spectral, morphological, thermal and hydrogen storage properties of the product were systematically investigated. The impact of functionalization induced structural and morphological properties on hydrogen adsorption/desorption kinetics gave new insight into developing high capacity storage medium based on carbon nanostructures.

Key words: Hydrogen storage; functionalization; structural and thermal properties

Download PDF

கார்பன் மீநுண்குழாய்கள் மற்றும் கலைவைகளின் ஹைட்ரஜன் சேமிப்பு திறன்

கார்த்திகேயன்.அ , லதாப்ரியா.வெ ,ராமமூர்த்தி. க, ஐய்யாக்குட்டி. கொ

இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்ப துறை

திரு இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம நிறுவனம், காட்டங்குளத்தூர், சென்னை

ஆய்வுச் சுருக்கம் :

ஒற்றை சுவர் நானோ குழாய்கள் மற்றும் பல சுவர்எ நானோ குழாய்களின் மேற்பரப்பில் டின்ஆக்ஸைடானது எளிய வேதியல் முறையின் மூலம் படிய வைக்கப்பட்டது. மேலும், தயாரிக்கப்பட்ட MWCNT/SnO2 மற்றும் SWCNT/SnO2 நானோ கலவைகளின் வடிவ மற்றும் இரசாயன மாற்றம் ஊடுகதிர் விளிம்பு பகுப்பாய்வு (XRD), எலக்ட்ரான் நுண்ணோக்கி (FESEM), ஊடுகதிர் ஆற்றல் சிதறல் நிறமாலையியல் (EDX) மற்றும் வெப்ப எடை அளவறி (TG) பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம்ஆய்வு செய்யப்பட்டது. நானோ கலவையானது அதன் ஹைட்ரஜன் சேமிப்பு / புறந்தள்ளுதல் திறன் ஹைட்ரஜனேற்ற அமைப்பு மற்றும் வெப்ப எடை அளவறி (TG) பகுப்பாய்வின் மூலம் சோதிக்கப்பட்டது. ஊடுகதிர் விளிம்பு பகுப்பாய்வின் மூலம் நானோ கலவைகளின் உரு அமைவானது ஆராய பட்டது. மேலும், தயாரிக்கப்பட்ட நானோ கலவைகளில், நானோ குழாய்களின் மேற்பரப்பானது டின் ஆக்ஸைடால் முற்றிலுமாக கவரப்பட்டிருப்பது உருவியல் பகுப்பாய்வின் உதவியோடு உறுதிசெய்யப்பட்டது மற்றும் நானோ கலவைகளில் கார்பன், டின் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதை EDX நிறமாலையியல் காட்டுகிறது. கூடுதலாக, MWCNT/SnO2 நானோ கலவையானது 100 o C வெப்ப நிலையில் 5 bar நிலையான ஹைட்ரஜன் அழுத்தத்தில் 0.75 wt % ஹைட்ரஜனை சேமித்துள்ளது என்பது வெப்ப பகுப்பாய்வு சோதனை யின் மூலம் கண்டுபிடிக்கபட்டது.

Key words: ஒற்றை சுவர் கார்பன் நானோகுழாய்கள்; SnO2; பல சுவர் கார்பன் நானோகுழாய்கள்; ஹைட்ரஜன் சேமிப்பு திறன்

Download PDF