Green Synthesis of Silver nanoparticles using piper nigrum extract for Dye Sensitized Solar Cell Applications

T. Solaiyammal1, S. Muniyappan1, B.GomathiThanga Keerthana1, K. Perumal1, P. Murugakoothan1*

1MRDL, PG and Research Department of Physics, Pachaiyappa’s College, Chennai 600 030, India

We report a facile green synthesis method for the production of silver nano particles (AgNPs) using the aqueous extract of piper nigrum (commonly known as black pepper) as reducing and capping agent. The as synthesized AgNPs colloid was mixed with titanium dioxide slurry to produce Ag:TiO2nanocomposite. The green synthesized AgNPs and Ag: TiO2nanocomposite were characterized using X-ray diffraction (XRD), Fourier Transmission Infra-Red Spectroscopy (FTIR), UV-vis-NIR spectroscopy, Field Emission Scanning Electron Microscopy (FESEM) with Energy Dispersive Spectroscopy (EDS), Scanning Electron Microscopy with Back Scattered Electron (BSE) and Transmission Electron Microscopy (TEM).

Key words: Green synthesis, Ag:TiO2nanocomposite, X-ray diffraction, Field emission scanning electron microscopy, TEM.

Download PDF

இயற்கைமுறையில் தயாரித்த (Green synthesis) வெள்ளி மீநுண்துகள்கள் (AgNPs) பதிலீடுகள் செய்யப்பட்ட TiO2 தொகுப்பும் அதன் சாய தூண்டுதலின் அடிப்படையிலான சூரிய மின்கல (Dye Sensitized Solar Cell) பயன்பாடுகளும்

தி. சோலையம்மாள், சு. முனியப்பன், பா. கோமதி தங்க கீர்த்தனா, கா. பெருமாள், ப. முருககூத்தன்*

பொருட்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகம் (MRDL), முதுகலை ஆராய்ச்சி மற்றும் இயற்பியல்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 600 030

*தொடர்பு முகவரி :murugakoothan03@yahoo.co.in

ஆய்வுச் சுருக்கம் :

வெள்ளி மீநுண்துகள்கள் (AgNPs) மிளகு சாறினை (அறிவியல் பெயர் piper nigrum என அறியப்படுகிறது) பயன்படுத்தி இயற்கைமுறை வேதிவினையின் மூலம் பெறப்பட்டது. மிளகு சாறில் உள்ள உயிர்வேதிப்பொருட்கள் இங்கு ஆக்சிஐன் ஒடுக்கியாகவும், வெள்ளி மீநுண்துகள்களை சுற்றி உறையாகவும் செயல்படுகிறது. தயாரிக்கப்பட்ட வெள்ளி மீநுண் துகள்களானது டைட்டானியம் டை ஆக்சைடு (TiO2) பசையுடன் சேர்கப்பட்டு Ag:TiO2 மீநுண் கலவையானது பெறப்படுகிறது. இக்கலவையானது சாய உணர் சூரிய மின்கலத்தில் (DSSC) பயன்படுத்தப்படும் நேர்மின்முனை (photoanode) உருவாக்கப் பயன்படுகிறது. தயாரிக்கப்பட்ட AgNPs மற்றும் Ag:TiO2 மீநுண் துகள்களானவை எக்ஸ் கதிர் சிதறல் (XRD), ஃபுரியார் மாற்று அகச்சிவப்பு நிறமாலையியல் (FTIR), புற ஊதா நிறமாலையியல் (UV-vis-NIR spectroscopy), புல உமிழ்வு மின்னணுக்கற்றை பரப்பு நுண்ணோக்கி (FESEM) உடன் இணைக்கப்பட்ட ஆற்றல் சிதறல் எக்ஸ்-ரே நிறமாலை (EDS) மற்றும் மின்னணுக்கற்றை பரப்பு நுண்ணோக்கி (SEM) உடன் இணைக்கப்பட்ட எதிர் சிதறல் மின்னணு (electron) முறை கண்டுபிடிப்பு (BSE) போன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆராய்ச்சி முடிவுகளானது இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

திறவுச்சொல்: இயற்கைமுறை-வேதிவினை, மிளகு சாறு, வெள்ளி மீநுண்துகள்கள் (AgNPs), Ag:TiO2 மீநுண்கலவை.

Download PDF